தமிழ் மண்ணின் மாண்பு - பாரம்பரிய அரிசி ரகங்களைக் கொண்டாடுவோம்
பொங்கல் பண்டிகை அரிசியுடன் மிக நெருக்கமாக இணைந்த ஒன்று. அரிசி தமிழ் மக்களின் பிரதான உணவாகும். பொங்கல் பண்டிகை காலத்தில் தமிழ்நாட்டில் பரவலாக நெல் அறுவடை செய்யப்படுகிறது. இந்தப் பொங்கல் பரிசுத் தொகுப்பில் தமிழ்நாட்டிலுள்ள 38 மாவட்டங்களுக்கும் தனித்துவமான 38 அரிசி வகைகளை ஒன்று சேர்த்து வழங்குகிறோம். தமிழ்நாட்டின் அரிசி பல்வகைமையை கொண்டாடும் ஒரு நிகழ்வாகவும் அதைப் பல நூற்றாண்டுகளாகப் பாதுகாத்து வரும் விவசாயிகளை கௌரவிக்கும் விதமாகவும் ‘தமிழ் மண்ணின் மாண்பு’ என்ற இந்தப் பரிசுத் தொகுப்பை வழங்குவதில் பெருமிதம் கொள்கிறோம்.
Pride of Tamil Nadu Rice Gift Box (Includes 38 Rice Varieties Each 100g)
The festival of Pongal is closely related to rice which is a staple food of Tamil Nadu. It is around Pongal period that rice gets harvested in Tamil Nadu. In this collection, we offer you 38 varieties of rices unique to each of the 38 districts of Tamil Nadu. This is an offering we make celebrating our rice biodiversity of Tamil Nadu and farmers who toil hard to conserve them for several centuries.